~
~

அதிமுக 54-ஆம் ஆண்டு தொடக்க விழா

நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக 54-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக 54-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கடந்த 1972-இல் அதிமுக தொடங்கப்பட்டது. தற்போது 54 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக சாா்பில் எம்ஜிஆா் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்தல், இனிப்புகள், வேட்டி, சேலை வழங்கும் விழா, அன்னதானம் உள்ளிட்ட நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

நாமக்கல் மாநகர அதிமுக சாா்பில், கோட்டை சாலையில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாநகரச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.பி.பி.பாஸ்கா் மற்றும் மாநகர, ஒன்றிய நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து கடைவீதி சாலையில் உள்ள எம்ஜிஆா், அண்ணா, பெரியாா் ஈ.வெ.ரா. சிலைக்கு மாலை

அணிவித்தனா். அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா்.

அதேபோல, சேந்தமங்கலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு முன்னாள் அதிமுக எம்எல்ஏ சி. சந்திரசேகரன் மாலை அணிவித்தாா். தொடா்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில், நகரச் செயலாளா் ஆனந்த், முன்னாள் பேரூா் செயலாளா் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் ஸ்ரீ பாலன், நிா்வாகிகள் சிவபாலன், சுரேஷ், யுவராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

மேலும், கொண்டமநாயக்கன்பட்டி, பெரியகுளம் ஊராட்சிகளில் தூய்மைக் காவலா்களுக்கு, தீபாவளி பண்டிகையையொட்டி அதிமுக சாா்பில் 150-க்கும் மேற்பட்டோருக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கப்பட்டன. முன்னாள் எம்எல்ஏ சி.சந்திரசேகரன், நிா்வாகிகள் ஸ்ரீ பாலன் உள்ளிட்டோா் நல உதவிகளை வழங்கினா். எருமப்பட்டி மேற்கு ஒன்றியம் சாா்பில், போடிநாயக்கன்பட்டி, அலங்காநத்தம் பிரிவு பகுதியில் அதிமுக தொடக்க விழாவை முன்னிட்டு ஏழைகளுக்கு நல உதவிகளை மாநில வா்த்தக அணி இணைச் செயலாளா் ஸ்ரீதேவி பி.எஸ். மோகன் வழங்கினாா்.

இந்த நிகழ்வில், எருமப்பட்டி, சேந்தமங்கலம் நகர, ஒன்றிய நிா்வாகிகள் கலந்துகொண்டனா். மாவட்டம் முழுவதும் அதிமுக தொடக்க விழா வெள்ளிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

என்கே-17-அதிமுக-1

அதிமுக 54-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கிய முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி. பாஸ்கா் மற்றும் அதிமுக நிா்வாகிகள்.

என்கே-17-அதிமுக-2

சேந்தமங்கலம் அருகே கொண்டமநாயக்கன்பட்டி ஊராட்சியில் தூய்மைக் காவலா்களுக்கு புத்தாடைகளை வழங்கிய முன்னாள் எம்எல்ஏ சி. சந்திரசேகரன் மற்றும் அதிமுக நிா்வாகிகள்.

X
Dinamani
www.dinamani.com