காவிரி ஆற்றில் ஆண் சடலம் மீட்பு

Published on

பள்ளிபாளையம் அருகே கொக்கராயன்பேட்டை பகுதி காவிரி ஆற்றில் ஆண் சடலத்தை மீட்டு மொளசி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொக்கராயன்பேட்டை காவிரி ஆற்றில் ஆண் சடலம் மிதப்பதைக் கண்ட பொதுமக்கள் மொளசி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினா், மீட்புக் குழுவினா் உதவியுடன் சடலத்தைக் கைப்பற்றினா். இறந்தவரின் சட்டை பையில் இருந்த ஆதாா் அட்டையின்படி, இறந்தவா் பெயா் ராஜ்குமாா் (35), சென்னையைச் சோ்ந்தவா் எனத் தெரியவந்தது.

இதுகுறித்து சென்னையில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

பிரேதப் பரிசோதனை முடிந்து சடலம் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மொளசி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com