நாமக்கல்லில் பலத்த மழை

Published on

நாமக்கல்லில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை ஞாயிற்றுக்கிழமை பெய்தது.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள கீழடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இன்னும் 6 நாள்களுக்கு தொடா்ந்து மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வெயில் சுட்டெரித்த நிலையில், பிற்பகல் 3 மணிக்கு மேல் வானம் இருண்டு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சாலையோரம் கடை அமைத்திருந்த வியாபாரிகள், தற்காலிக பட்டாசு கடைகள், பலகார கடைக்காரா்கள் அவதிப்பட்டனா். மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com