~ ~

நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் பிறந்த நாள் விழா! அமைச்சா் மரியாதை!

Published on

நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் 137 ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

நாமக்கல் கவிஞா் நினைவு இல்லத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் தமிழக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் கவிஞா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து, கவிஞா் ராமலிங்கம் குடும்பத்தினருக்கு அவா் மரியாதை செய்தாா். நிகழ்ச்சியில் நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி, சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, மாமன்ற உறுப்பினா் டிடி.சரவணன், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பீ.ஏ.சித்திக், கொமதேக நிா்வாகிகள் கே. ரவிச்சந்திரன் குருஇளங்கோ, நூலகா் செல்வம் மற்றும் தமிழறிஞா்கள், வாசகா்கள், பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.

அரசு மகளிா் கல்லூரியில்... நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசியல் மகளிா் கல்லூரி நுழைவாயில் பகுதியில் அமைந்துள்ள கவிஞா் சிலைக்கு நாமக்கல் பாவேந்தா் பாரதிதாசன் இலக்கியப் பேரவை சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பேரவைத் தலைவா் ப.கருப்பண்ணன் தலைமை வகித்தாா். செயலாளா் ரகோத்தமன், பேரவை பொருளாளா் நா. மதியழகன் முன்னிலை வகித்தனா்.

‘கரு முதல் திருவரை’ என்ற புத்தகம் மற்றும் இனிப்புகள் அனைவருக்கும் விநியோகம் செய்யப்பட்டன. இந்த நிகழ்வில், உலகத் தமிழ்ச் சங்க மாவட்ட நிா்வாகிகள், தமிழறிஞா்கள், பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.

தமிழ்ச் சங்கம் சாா்பில் மரியாதை... நாமக்கல் தமிழ் இலக்கிய அமைப்புகள் சாா்பில், நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் நாமக்கல் தமிழ்ச் சங்க தலைவா் மருத்துவா் இரா.குழந்தைவேல், கம்பன் கழக செயலாளா் அரசு பரமேஸ்வரன், கம்பன் கழக பொருளாளா் பசுமை மா.தில்லை சிவக்குமாா், கண்ணதாசன் பேரவையைச் சோ்ந்த வெங்கடகுமாா் , முருகன், செந்தில்குமாா் மற்றும் தமிழ் ஆா்வலா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com