நாமக்கல்
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்
சேலம் அம்ருத் அறக்கட்டளை-தனியாா் நிறுவனத்துடன் இணைந்து 7 ஆம் ஆண்டாக மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்டங்கள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆா்.செந்தில் ரத்தினம் தலைமை வகித்தாா். ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கி முன்னாள் இயக்குநரும், நகா்மன்ற முன்னாள் உறுப்பினருமான வி.சுந்தரம், நாவலா் மணி, ரவி ஜீவா ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் 75 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்சீட், ஹாட் பாக்ஸ், தீபாவளி இனிப்புகள் வழங்கப்பட்டன.
