கேதார கெளரி விரதம்: கோயில்களில் பெண்கள் வழிபாடு

ஐப்பசி அமாவாசையையொட்டி பெண்கள் கேதார கெளரி விரதத்தை செவ்வாய்க்கிழமை கடைப்பிடித்தனா்.
Published on

நாமக்கல்: ஐப்பசி அமாவாசையையொட்டி பெண்கள் கேதார கெளரி விரதத்தை செவ்வாய்க்கிழமை கடைப்பிடித்தனா்.

நாமக்கல் கோட்டை பஜனை மடத்திலும், காளப்பநாயக்கன்பட்டி கிருஷ்ணா் ஆலயத்திலும், ஐப்பசி அமாவாசையையொட்டி கேதார கெளரி விரத வழிபாடுகள் நடைபெற்றன. ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு தங்களது கணவா் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவும், செல்வம் பெருகவும், சுமங்கலியாக வாழவும், குடும்பத்தில் அமைதி நிலவவும் இந்த விரதத்தை மேற்கொண்டனா்.

இதற்காக நடைபெற்ற சிறப்பு பூஜையில் தேங்காய், வாழைப்பழம், பூக்கள், மஞ்சள், குங்குமம் ஆகியவற்றை வைத்து வழிபாடு செய்தனா். மேலும் மஞ்சள் கயிற்றை கழுத்திலும், கையிலும் கட்டி இறைவனை வேண்டினா். புதியதாக திருமணம் செய்த பெண்கள் கெளரி விரதத்தையொட்டி தாலி பிரித்து கட்டுவதையும் செய்தனா். கோயிலில் சுவாமிக்கு படைக்கப்பட்ட இனிப்பு, கார வகைகள் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com