நாமக்கல் மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

நாமக்கல் மாவட்டத்தில் புதன்கிழமை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் புதன்கிழமை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையை பொருத்தமட்டில் பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 91.4, 77 டிகிரியாக காணப்பட்டது. மாவட்டத்தின் பல இடங்களில் மிதமான மழை பதிவானது. அடுத்துவரும் ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும்.

மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை மற்றும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புதன் மற்றும் சனிக்கிழமைகளில் மிக பலத்த மழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 87.8, இரவு வெப்பம் 77 டிகிரியாக இருக்கும். காற்று பெரும்பாலும் மேற்கு மற்றும் தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 6 முதல் 12 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com