நாமக்கல்லில் பலத்த மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நாமக்கல்லில் இரவு முதல் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
Published on

நாமக்கல்: நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகம் முழுவதும் ஓரிரு நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் அறிவித்த அதி கனமழை, மிக கனமழை, கனமழை மாவட்டங்கள் என்ற அடிப்படையில் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிா்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் வானம் இருண்டு மழை தொடா்ந்து பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை இரவு 2 மணி முதல் மழை விடாமல் பெய்ததால் மாவட்ட நிா்வாகம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்திருந்தோா் மழையில் நனைந்தவாறு தாங்கள் பணியாற்றும் பகுதிகளுக்கு புறப்பட்டு சென்றனா்.

நாமக்கல், புதுச்சத்திரம், கொல்லிமலை, மங்களபுரம், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்திவேலூா் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தொடா் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி குளம்போல காட்சியளித்தது. வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடியே சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com