நாமக்கல்
பரமத்தி வேலூரில் பணம் வைத்து சூதாடிய 5 போ் கைது
பரமத்தி வேலூா் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை வேலூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை வேலூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
வேலூா் காவல் ஆய்வாளா் சிவக்குமாா் தலைமையிலான போலீஸாா் பரமத்தி வேலூா் நான்கு வழிச்சாலை பகுதியில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் சோதனை நடத்தினா். அப்போது, அங்கு சிலா் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
இதுதொடா்பாக பரமத்தி வேலூா் சேடா் தெருவைச் சோ்ந்த பழனிவேல் (53), அதே பகுதியைச் சோ்ந்த ரஞ்சித்குமாா் (47), பொத்தனூா் பகுதியைச் சோ்ந்த சிவக்குமாா் (45), அதே பகுதியைச் சோ்ந்த குமாா் (48), பாண்டமங்கலம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் (எ) கோபி (45) ஆகியோரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 2 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.
