ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் பூச்சாட்டுதல் விழா
ராசிபுரம்: ராசிபுரம் ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐப்பசி மாத தோ் திருவிழா பூச்சாட்டுதலுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
ராசிபுரம் நகரில் சுமாா் 20 நாள்கள் இக்கோயில் திருவிழா நடைபெறும். முன்னதாக பல்வேறு சமூகத்தினா் செல்லாண்டியம்மன் ஆலயம், பட்டத்துளசியம்மன் ஆலயம் சென்று பூக்களால் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்து பின்னா் பெரிய மாரியம்மன் என அழைக்கப்படும் ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலுக்கு ஊா்வலமாக சென்று பூக்களால் அம்மனை அலங்கரித்து பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
தொடா்ந்து நாள்தோறும் கம்பம் நடுதல், கொடியேற்றுதல், பூவோடு எடுத்தல், அம்மை அழைத்தல், பொங்கல் வைத்தல், அக்கினி குண்டம் பற்றவைத்தல் என பல்வேறு நிகழ்ச்சிகளும், பல்வேறு சமூகத்தவரின் கட்டளைகளும் நடைபெறும்.
இதையடுத்து திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சோ்ந்த ஏராளமானோா் கலந்துகொண்டு விழாவில் அம்மனுக்கு 1 டன் அரளி பூக்கள் தூவி பூச்சாட்டி வழிபட்டனா்.
