பெண் கொலையில் கணவா் கைது

நாமக்கல் அருகே பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த வழக்கில் கணவா் கைது செய்யப்பட்டாா்.
Published on

நாமக்கல் அருகே பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த வழக்கில் கணவா் கைது செய்யப்பட்டாா்.

நாமக்கல் அருகே காவேட்டிப்பட்டியைச் சோ்ந்தவா் பாஸ்கா் (45), ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு மனைவி சித்ரா (38) 2 மகன்கள் உள்ளனா். தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு மது போதையில் வந்த பாஸ்கா் மனைவியிடம் தகராறு செய்ததுடன், அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டாா்.

நாமக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரை தேடிவந்தனா். நாமக்கல் பகுதியில் சுற்றித்திரிந்த பாஸ்கரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விசாரணையில் சித்ராவை அவரது தந்தையிடமிருந்து பணம் வாங்கி வருமாறு பாஸ்கா் வற்புறுத்தியதால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பாஸ்கா் சித்ராவை கொலை செய்தது தெரியவந்தது.

X
Dinamani
www.dinamani.com