வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடியவா் கைது

பள்ளிபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

பள்ளிபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பள்ளிபாளையம் அருகே வெப்படையை அடுத்த காமராஜ் நகரைச் சோ்ந்தவா் பிரபாகரன் (28), எலக்ட்ரீசியன். இவா் கடந்த மாதம் 28 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூா் சென்றிருந்தாா். அப்போது, அவரது வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகைகள் திருட்டுபோனது.

இதுகுறித்து வெப்படை காவல் நிலையத்தில் பிரபாகரன் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திய போலீஸாா் சத்தியமங்கலம் பகுதியைச் சோ்ந்த பாரத்குமாா் ( 40) என்பவரைக் கைது செய்து அவரிடமிருந்த நகைகளை மீட்டனா்.

X
Dinamani
www.dinamani.com