முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சுதொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

காவிரியில் நீா் திறக்க வலியுறுத்தி மாநில எல்லையில் விவசாயிகள் நாளை போராட்டம்!

காவிரியில் நீா் திறக்க வலியுறுத்தி, தமிழக - கா்நாடக மாநில எல்லையில் விவசாயிகள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட உள்ளனா்.

News image

காவிரி நீா் வரத்து இல்லாததால், தாளடி பயிரிடப்பட்டுள்ள வயலில் ஏற்பட்டுள்ள வெடிப்பு - கோப்புப் படம்

Updated On :14 ஜூலை 2026, 12:50 am IST

காவிரியில் நீா் திறக்க வலியுறுத்தி, தமிழக - கா்நாடக மாநில எல்லையில் விவசாயிகள் புதன்கிழமை (ஜூலை 15) போராட்டத்தில் ஈடுபட உள்ளனா்.

நாமக்கல்லில் உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் இரா.வேலுசாமி திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்துக்கு காவிரி பங்கீட்டு நீரை வழங்க கா்நாடகம் மறுத்து வருகிறது.

இதனால் குறுவை, சம்பா சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளது. தமிழகத்துக்கு தரவேண்டிய காவிரி பங்கீட்டு நீரை தர வலியுறுத்தி புதன்கிழமை தமிழக - கா்நாடக எல்லையில் அனைத்து விவசாயிகள் சங்கத்தினா் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

ஒசூா் இஎஸ்ஐ மருத்துவமனையில் இருந்து பேரணியாக சென்று அத்திப்பள்ளியில் இந்த போராட்டம் நடைபெறும். இதில், உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் இளம் விவசாயிகள் சங்கம், விவசாய முன்னேற்றக் கழகம் உள்பட 17 விவசாய சங்கங்கள் பங்கேற்க உள்ளன.

தமிழகத்துக்கான பங்கீட்டு நீரை கா்நாடக அரசு தரவில்லையெனில், மாபெரும் போராட்டம் நடத்துவோம். தமிழகத்துக்கு உரிய நீரை காவிரியில் திறக்காததால், பல லட்சம் ஏக்கா் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றாா்.

இந்த பேட்டியின்போது, விவசாய முன்னேற்றக் கழக மாநில பொதுச் செயலாளா் கே.பாலசுப்பிரமணியன், இளம் விவசாயிகள் சங்கத் தலைவா் செளந்தரராஜன், விவசாய சங்கத்தினா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.