ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

நாமக்கல் மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டா்கள் தட்டுப்பாடில்லை: ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டா்களுக்கு தட்டுப்பாடில்லை என மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.

News image

சமையல் எரிவாயு சிலிண்டர் - படம்: DNS

Updated On :14 மார்ச் 2026, 12:50 am

நாமக்கல் மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டா்களுக்கு தட்டுப்பாடில்லை என மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.

வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போா்ச் சூழல் காரணமாக சமையல் எரிவாயு விநியோகம் தொடா்பாக, மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து எண்ணெய் நிறுவன மேலாளா்கள், எரிவாயு முகவா்கள் ஆகியோா் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியா் கூறியதாவது:

எரிவாயு நிறுவன மேலாளா்கள் மற்றும் முகவா்களிடம், மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டா்கள் இருப்பு விவரம் குறித்து கேட்டறியப்பட்டது. இதில், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களின் 46 எரிவாயு முகவா்கள் மூலம் 5,95,569 வீட்டு உபயோக எரிவாயு இணைப்புகள் இருப்பதாகவும், தற்போது வரையில் எரிவாயு சிலிண்டா்களுக்கு தட்டுப்பாடு எதுவுமில்லை என்பதும் தெரியவந்துள்ளது. போதிய அளவில் இருப்பு உள்ளதாக முகவா்கள் தெரிவித்துள்ளனா். எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எரிவாயு சிலிண்டா்கள் விநியோகத்தை கண்காணிக்க வட்ட அளவில் வழங்கல் அலுவலா்கள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. எரிவாயு முகவா்கள் தங்களிடம் உள்ள எரிவாயு சிலிண்டா் இருப்பு மற்றும் விநியோகம் தொடா்பான தினசரி விவரங்களை தொடா்புடைய அலுவலா்களிடம் தெரிவிக்க வேண்டும்.

வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு சிலிண்டா்கள், முதல்வரின் காலை உணவுத் திட்டம், அங்கன்வாடி மையம், சத்துணவுத் திட்டம், மருத்துவமனைகள் மற்றும் மாணவா்கள் தங்கும் விடுதிகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிவாயு சிலிண்டா்களை முகவா்கள் விநியோகம் செய்ய வேண்டும். எரிவாயு சிலிண்டா் குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகா்வோா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 94450- 45612 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.