Enable Javscript for better performance
ஆத்தூரில் தேமுதிக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஆத்தூரில் தேமுதிக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

    By  ஆத்தூர்,  |   Published on : 27th March 2014 10:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலம் மாவட்டம், ஆத்தூரில் கள்ளக்குறிச்சி தொகுதி தேமுதிக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
     கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் வி.பி.ஈஸ்வரன் அறிமுகக் கூட்டம் ஆத்தூரில் மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
     இந்தக் கூட்டத்தில் தேமுதிக வேட்பாளர் டாக்டர் வி.பி.ஈஸ்வரனை அறிமுகப்படுத்தி கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பேசினர். தேர்தல் பொறுப்பாளர்கள் ஏ.ஆர்.பன்னீர்செல்வம், தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் பாஸ்கர், தலைவாசல் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.சுபா, மாவட்ட அவைத் தலைவர் சுரேஷ்பாபு, கேப்டன் மன்ற மாநில துணைச் செயலர் சுல்தான்பாஷா, பாஜக மாவட்டச் செயலர் டி.ஜெயஆனந்த், விஜயபாஸ்கர், ஐஜேகே மாநில துணைச் செயலர் டி.பி.பச்சமுத்து, பாமக மாநில துணைத் தலைவர் பி.என்.குணசேகர், வ.ராசா, நட்ராஜ், பார்த்திபன், மதிமுக மாவட்ட துணைச் செயலர் வ.கோபால்ராசு, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி ஒன்றியச் செயலர் சிவசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். தேமுதிக நகரச் செயலாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai