Enable Javscript for better performance
ஏற்காட்டில் ஊரைவிட்டு ஒதுக்கிவைத்ததாக  இரு குடும்பத்தினர் ஆட்சியரிடம் புகார்- Dinamani

சுடச்சுட

    

    ஏற்காட்டில் ஊரைவிட்டு ஒதுக்கிவைத்ததாக  இரு குடும்பத்தினர் ஆட்சியரிடம் புகார்

    By  சேலம்,  |   Published on : 27th March 2014 10:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடும்ப சொத்தை மீட்பதற்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததால், தங்களை ஊரை விட்டே ஒதுக்கி வைத்துள்ளதாக ஏற்காட்டைச் சேர்ந்த குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர்.
     இதுதொடர்பாக ஏற்காடு கோயில் மேடு பகுதியைச் சேர்ந்த பீ.ஜான்பீட்டர் (44), அவரது மனைவி நித்யாராணி ஆகியோர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை அளித்த மனு விவரம்:
     நாங்கள் ஏற்காடு கோயில் மேடு பகுதியில் வசித்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமான சுமார் 400 சதுர அடி நிலத்தை பாத்திமா உள்ளிட்டோர் அபகரித்துக் கொண்டனர்.
     அந்த நிலத்துக்கான ஆவணங்கள் அனைத்தும் எங்களிடம் உள்ள நிலையில், அதை திருப்பிக் கொடுக்க மறுக்கின்றனர். இதுதொடர்பாக சேலம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம். இந்த நிலையில், ஊரில் உள்ள 48 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், நில அபகரிப்பாளர்களுக்கு ஆதரவாக சேர்ந்து கொண்டு எங்களை ஊரை விட்டே தள்ளி வைத்தனர். எங்களுடன் யாரும் பேசுவதில்லை. மேலும் ஆலயத்துக்கு செல்லவும் அனுமதி மறுக்கப்படுகிறது. வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டு ஊரைவிட்டே சென்றுவிடும்படி ஊரார் மிரட்டுகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக ஊராட்சித் தலைவர் முரளி, துணைத் தலைவர் சுரேஷ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் செயல்படுகின்றனர்.
     எனவே, இது தொடர்பாக விசாரணை நடத்தி எங்களது உயிருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     இதைப் போன்றே, தனது சகோதரர் தனது குடும்ப சொத்து முழுவதையும் அபகரித்துக் கொண்டதாகவும், இதுகுறித்து கேட்டதற்கு தனது குடும்பத்தையும் ஊரை விட்டே ஒதுக்கி வைத்திருப்பதாகவும் அதே பகுதியைச் சேர்ந்த டோமினிக் சால்வியோவும் புகார் தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai