Enable Javscript for better performance
ஏற்காட்டில் குதிரை சவாரி  சென்ற மூவர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    சேலம் மாவட்டம், ஏற்காட்டில் குதிரை வண்டி முறிந்து விழுந்ததில் அதில் சவாரி செய்த மூன்று சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர்.
     ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் தனியார் ஒருவர் குதிரை வண்டி மூலம் சுற்றுலாப் பயணிகளை சவாரி அழைத்துச் சென்று வந்தார். படகு இல்லத்தை குதிரை வண்டியில் சவாரி செய்து பார்வையிடுவது சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளித்து வந்தது.
     இந்த நிலையில், புதன்கிழமை மாலை படகு இல்லத்தை பார்ப்பதற்காக மூன்று சுற்றுலாப் பயணிகள் குதிரை வண்டியில் சவாரி சென்றனர். அப்போது, குதிரை வண்டி முறிந்து விழுந்தது. இதில் சுற்றுலாப் பயணிகள் மூவரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் ஏற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai