Enable Javscript for better performance
ஓமலூர் அருகே பாலம் கட்டும்  பணியை முற்றுகையிட்ட மக்கள்- Dinamani

சுடச்சுட

    

    ஓமலூர் அருகே பாலம் கட்டும்  பணியை முற்றுகையிட்ட மக்கள்

    By  ஓமலூர்,  |   Published on : 27th March 2014 09:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தரமில்லாமல் நடைபெறுவதாகக் கூறி, பாலம் கட்டும் பணியை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
     ஓமலூர் அருகேயுள்ள கஞ்சநாயக்கன்பட்டி சந்தைத் தடம் பகுதியில் உள்ள இணைப்புச் சாலையில் சரபங்கா நதியின் குறுக்கே
     பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, சுமார் ஒரு கோடியில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
     இந்தப் பணிகள் தரமில்லாமலும், உறுதித் தன்மையைப் பரிசோதிக்காமலும் நடைபெறுவதாகக் கூறி, அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாலம் கட்டும் பணி நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டனர்.
     இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த பொதுப் பணித் துறை அதிகாரிகள் பாலம் கட்டுமானப் பணியை தொடர்ச்சியாகக் கண்காணிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, முற்றுகைப் போராட்டதைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai