Enable Javscript for better performance
கெங்கவல்லி அருகே  விபத்தில் இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே இரு சக்கர வாகனம் சாலையோர மைல் கல் மீது மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
     பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியம், பாளையூரைச் சேர்ந்த தங்கவேல் மகன் திருநாவுக்கரசு (35). ஓட்டுநரான இவர், தனது இரு சக்கர வாகனத்தில் கெங்கவல்லி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு புதன்கிழமை மாலை வந்து கொண்டிருந்தார். அப்போது, தெடாவூ-கெங்கவல்லி பிரிவு சாலையில் வளைவில் திரும்பும் போது, இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மைல்கல்லில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே திருநாவுக்கரசு உயிரிழந்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai