Enable Javscript for better performance
சங்ககிரி அருகே பயன்பாட்டுக்கு  வராத ஆழ்துளைக் கிணறு:  குடிநீருக்கு பொதுமக்கள் தவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    சங்ககிரி அருகே பயன்பாட்டுக்கு  வராத ஆழ்துளைக் கிணறு:  குடிநீருக்கு பொதுமக்கள் தவிப்பு

    By  சங்ககிரி,  |   Published on : 27th March 2014 10:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், வடுகப்பட்டி அருகேயுள்ள வேப்பம்பட்டி கிராமத்தில் குடிநீர்த் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
     இந்தப் பகுதியில் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணற்றை சீரமைத்து நீரேற்றம் செய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் மனு அனுப்பினர்.
     வேப்பம்பட்டி கிராமம், கலப்பாரைக்காட்டில் கடந்த 2010-11ஆம் ஆண்டில் ரூ.3.67 லட்சத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு, 10 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது.
     தற்போது வரை அந்த மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில்
     நீர் ஏற்றப்படாததால், வேப்பம்பட்டி கிராமத்துக்குள்பட்ட கலப்பாரைக்காடு, வடுவங்காடு உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீரின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
     இதுகுறித்து பல முறை மனு அளித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாததால் அந்தக் கிராமப் பொதுமக்கள் குடிநீர் இல்லாமல் அவதியடைந்துள்ளனர்.
     இதையடுத்து, மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி அந்தப் பகுதி மக்கள் முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai