Enable Javscript for better performance
சேலத்தில்  கார் மோதியதில்  பள்ளி மாணவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    சேலத்தில் கார் மோதியதில் பள்ளி மாணவர் உயிரிழந்தார்.
     சேலம் சன்னியாசிக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் நாராயணமூர்த்தி (46). இவரது மகன்கள் ஸ்ரீ குரு பங்கஜ பஜி ராஜி (12), கணேஷ் சபரி 10). இருவரும் அங்குள்ள தனியார் பள்ளியில் 6, 5ஆம் வகுப்பு படித்து வந்தனர். மாலையில் பள்ளி முடிந்ததும் மகன்கள் இருவரையும் தான் வேலைபார்க்கும் அஸ்தம்பட்டி கடைக்கு அழைத்து செல்லும் நாராயணமூர்த்தி இரவில் வீடு திரும்பும்போது தன்னுடன் அழைத்து வருவார்.
     இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு தனது இரு மகன்களுடன் நாராயணமூர்த்தி இரு சக்கர வாகனத்தில் சன்னியாசிக்குண்டு சாலையைக் கடக்கும் போது ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற கார் மோதியது. இதில் மூவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.
     இதில் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஸ்ரீகுரு பங்கஜ பஜி ராஜி உயிரிழந்தார். கணேஷ் சபரி, நாராயணமூர்த்தி ஆகிய இருவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
     இந்தச் சம்பவம் குறித்து கிச்சிப்பாளையம் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai