Enable Javscript for better performance
சேலத்தில் அதிமுக, திமுக தேர்தல் அலுவலகங்கள் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    சேலத்தில் அதிமுக, திமுக தேர்தல் அலுவலகங்கள் திறப்பு

    By சேலம்  |   Published on : 27th March 2014 10:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலத்தில் அதிமுக, திமுக கட்சிகளின் தலைமைத் தேர்தல் அலுவலகங்கள் புதன்கிழமை திறக்கப்பட்டன.
     அதிமுகவின் தேர்தல் தலைமை அலுவலகம், சேலம் ராமகிருஷ்ணா சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.
     இதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. மாநில நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
     எம்.எல்.ஏ.க்கள் எம்.கே.செல்வராஜ், எஸ்.கே.செல்வம், மேயர் எஸ்.செüண்டப்பன், அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
     அதேபோல, சேலம் 5 சாலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திமுகவின் தலைமை அலுவலகத்தின் திறப்பு விழாவும் புதன்கிழமை நடைபெற்றது.
     இந்த நிகழ்ச்சியில், திமுகவின் உயர்நிலைச் செயல் திட்டக் குழு உறுப்பினரும், சேலம் மக்களவைத் தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான சுப்புலட்சுமி ஜெகதீசன் கலந்து கொண்டு அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
     முன்னதாக வேட்பாளர் உமாராணியை அறிமுகம் செய்து சுப்புலட்சுமி ஜெகதீசன் பேசினார்.
     இந்த நிகழ்ச்சியில், திமுக மாவட்டப் பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், இளைஞரணி மாநிலத் துணைச் செயலர் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. வீரபாண்டி ஆ.ராஜா, மாநகரச் செயலர் எஸ்.டி.கலையமுதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai