Enable Javscript for better performance
சேலத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருள்கள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    சேலத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருள்கள் பறிமுதல்

    By  சேலம்,  |   Published on : 27th March 2014 09:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலம் மரவனேரி பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற வாகனச் சோதனையில் வட மாநில வியாபாரியிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
     தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருப்பதை அடுத்து, கடந்த 20 நாள்களாக வாகனச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காகப் பணமோ, இலவசப் பொருள்களோ கொண்டுச் செல்லப்படலாம் என்பதால் அவற்றைத் தடுப்பதற்காக காவல் துறை, தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அரசு அலுவலர்கள் மூலம் இந்தச் சோதனை நடத்தப்படுகிறது.
     இந்த நிலையில், தேர்தல் கணக்கு நிலைக்குழு அலுவலர் தனசேகரன், தலைமைக் காவலர்கள் தேவராஜன், மணி, ராமசாமி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், புதன்கிழமை மரவனேரி பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
     அப்போது, சென்னையில் இருந்து சேலம் வந்த தனியார் சொகுசுப் பேருந்தில் சோதனை நடத்தியதில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த குருசிங் (26) என்பவரிடம் சுமார் 7 கிலோ எடையிலான வெள்ளி குங்குமச் சிமிழ்கள், டம்ளர், தட்டு போன்றவை இருந்தது தெரிய வந்தது.
     இதன் மதிப்பு ரூ.3 லட்சம் என்று தெரிவித்த குருசிங், இவற்றை சேலத்தில் உள்ள ஒரு நகைக் கடைக்கு விற்பனைக்காக எடுத்து வந்ததாகத் தெரிவித்தார்.
     இருப்பினும், உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், உரிய ஆவணங்களைக் காட்டிவிட்டு அவற்றை பெற்றுச் செல்லலாம் என்று தெரிவித்தனர்.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai