Enable Javscript for better performance
சேலத்தில் வியாபாரிக்கு  அரிவாள் வெட்டு- Dinamani

சுடச்சுட

    

    சேலத்தில் பினாயில் வியாபாரியை அரிவாளால் வெட்டிக் காயப்படுத்திய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
     சேலம் அருகேயுள்ள பனமரத்துப்பட்டி மாருதிநகரைச் சேர்ந்தவர் பினாயில் வியாபாரி செல்வம் (45). இவர் புதன்கிழமை இரவு சேலம் தாதகாப்பட்டியில் உள்ள வழக்குரைஞரைச் சந்தித்து விட்டு வீட்டுக்கு திரும்பிச் செல்லும் வழியில் இரவு 8 மணியில் மர்ம நபர்கள் அரிவாளால் அவரை வெட்டினர். இதில் உடலில் பல இடங்களில் செல்வத்துக்கு வெட்டு விழுந்தது. பலத்த காயமடைந்த செல்வம் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
     இந்தச் சம்பவம் குறித்து சேலம் அன்னாதானப்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்துத் தகராறில் கூலிப்படையினர் மூலம் இந்தச் சம்பவம் நடைபெற்றதா என்பதும் குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai