Enable Javscript for better performance
டிராக்டர் கவிழ்ந்து விபத்து:  இருவர் பலத்த காயம்- Dinamani

சுடச்சுட

    

    டிராக்டர் கவிழ்ந்து விபத்து:  இருவர் பலத்த காயம்

    By  தம்மம்பட்டி,  |   Published on : 27th March 2014 10:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் செங்கல் சுமை ஏற்றிச் சென்ற டிராக்டர் கவிழ்ந்ததில் இருவர் பலத்த காயமடைந்தனர்.
     தம்மம்பட்டியிலுள்ள ஒரு செங்கல் சூளையிலிருந்து செங்கல்கள் ஏற்றிக்கொண்டு டிராக்டர் செந்தாரப்பட்டி நோக்கி புதன்கிழமை சென்று கொண்டிருந்தது.
     அப்போது, செந்தாரப்பட்டி ஓணான்கரடு பகுதியில் சென்ற போது திருப்பத்தில் டிராக்டர் கவிழ்ந்தது. இதில், மணிகண்டன் (22), சாந்தி (25) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து தம்மம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai