Enable Javscript for better performance
தம்மம்பட்டியில் 3 இரு சக்கர வாகனங்கள்  பெட்ரோல் ஊற்றி எரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தம்மம்பட்டியில் 3 இரு சக்கர வாகனங்கள்  பெட்ரோல் ஊற்றி எரிப்பு

    By  தம்மம்பட்டி,  |   Published on : 27th March 2014 10:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் கொங்கு மக்கள் தேசியக் கட்சி பிரமுகரின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மூன்று இரு சக்கர வாகனங்களை பெட்ரோல் ஊற்றி எரித்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
     தம்மம்பட்டி உடையார்பாளையம் மாரியம்மன் கோயில் பின்புறமுள்ள பகுதியைச் சேர்ந்தவர் மணி (46). இவர் தம்மம்பட்டி பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவராவார். மேலும், இவர் கொங்கு மக்கள் தேசியக் கட்சியில் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.
     இந்த நிலையில், இவரது வீட்டின் மூன்று இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. புதன்கிழமை காலையில் பார்த்தபோது, மூன்று இரு சக்கர வாகனங்களும் எரிந்துக் கிடந்தன.
     இது குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியது:
     இரு சக்கர வாகனத்தை எரித்துச் சென்ற மர்ம நபர்கள், எங்களது வீடுகளையும் வெளிப்புறமாக பூட்டிச் விட்டுச் சென்று விட்டனர். பிறரது உதவியுடன் தான் அனைவரும் வீட்டில் இருந்து வெளியே வர முடிந்தது என்றனர்.
     இது குறித்து மணி, முருகேசன் ஆகியோர் அளித்த புகாரின்
     பேரில் தம்மம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai