Enable Javscript for better performance
தீ விபத்தில் கன்றுக்குட்டி சாவு- Dinamani

சுடச்சுட

    

    சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே புதன்கிழமை மாட்டுக் கொட்டகையில் நிகழ்ந்த தீ விபத்தில் கன்றுக்குட்டி கருகி உயிரிழந்தது.
     கெங்கவல்லி அருகேயுள்ள ஆணையாம்பட்டி புதூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (55). இவருக்குச் சொந்தமான மாட்டுக் கொட்டகை புதன்கிழமை தீப்பிடித்து எரிந்தது. இதில், அங்கு கட்டப்பட்டிருந்தக் கன்றுக்குட்டி கருகி உயிரிழந்தது. மற்றொரு கன்றுக்குட்டிக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
     இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்தனர். வட்டாட்சியர் சக்திவேல், வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் தீ விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்து நிவாரண நிதிக்கு பரிந்துரை செய்தனர்.
     அதேபோல, கெங்கவல்லி அருகேயுள்ள நடுவலூர் பள்ளக்காடு கிராமத்தைச் சேர்ந்த நல்லமுத்து என்பவரின் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்து குறித்தும் வருவாய்த் துறையினர் நிவாரண உதவிக்கு பரிந்துரை செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai