Enable Javscript for better performance
மேட்டூரில் காவலர் பயிற்சிப் பள்ளி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    மேட்டூரில் காவலர் பயிற்சிப் பள்ளி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

    By  மேட்டூர்,  |   Published on : 27th March 2014 10:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலம் மாவட்டம், மேட்டூரில் காவலர் பயிற்சிப் பள்ளி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
     மேட்டூர் அருகேயுள்ள குள்ளவீரன்பட்டி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குயிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதி வனப் பகுதியை ஒட்டி உள்ளது. இங்கு 150 ஏக்கர் பரப்பளவில் காவலர் பயிற்சிப் பள்ளி அமைக்க நில அளவைப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு இந்தப் பகுதி மக்கள் தொடக்கம் முதலே எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். கடந்த புதன்கிழமை குடியிருப்புகளை சிலர் விரிவாக்கம் செய்தனர். இதை போலீஸôர் தடுத்தனர். அதனால், இரு தரப்பினரிடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டது.
     இதில், போலீஸôர் அத்துமீறி நடந்துக் கொண்டதாகப் புகார் கூறப்பட்டது. அத்துமீறலில் ஈடுபட்ட போலீஸôர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், இந்தப் பகுதியில் காவலர் பயிற்சிப்பள்ளி அமைக்க கூடாது என்று வலியுறுத்தி, புதன்கிழமை அந்தப் பகுதி மக்கள் மேட்டூர் வட்டாட்சியர் மீனாவை முற்றுகையிட்டு வலியுறுத்தினர்.
     பின்னர், மேட்டூர் சார் ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். தேர்தலுக்குப் பிறகு இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சார் ஆட்சியர் கூறினார். இதையடுத்து, தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடபோவதாகக் கூறி ஆதரவு அந்தப் பகுதி மக்கள் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai