Enable Javscript for better performance
108 ஆம்புலன்ஸ் வாகனத்தில்  பிறந்த இரட்டைக் குழந்தைகள்- Dinamani

சுடச்சுட

    

    108 ஆம்புலன்ஸ் வாகனத்தில்  பிறந்த இரட்டைக் குழந்தைகள்

    By  ஏற்காடு  |   Published on : 27th March 2014 10:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் புதன்கிழமை இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.
     ஏற்காடு வெள்ளக்கடை கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்குமார். இவரது மனைவி மணியம்மாள் (20). புதன்கிழமை காலை நிறைமாத கர்ப்பிணியான மணியம்மாளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, ஏற்காட்டில் உள்ள 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரச் செய்து மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், வாகனத்திலேயே இரு பெண் குழந்தைகள் பிறந்தன.
     பிரசவத்தின் போது, வாகன மருத்துவ உதவியாளர் எம். நடேசன், வாகன ஓட்டுநர் பாலமுருகன் ஆகியோர் உதவினர். பின்னர், மணியம்மாள், இரு குழந்தைகளும் நாகலூர் ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்க்கப்பட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai