Enable Javscript for better performance
உழவர் நண்பர்களுக்கு சேவை ஊதியம்- Dinamani

சுடச்சுட

    

    ஓமலூர் அருகே காடையாம்பட்டி வட்டார விவசாய நண்பர்களுக்கு சேவை ஊதியம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

    காடையாம்பட்டி வட்டாரத்தில் பூ வகைகள், அவரை, துவரை, மஞ்சள் ஆகியவை அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. விவசாயிகளை ஊக்கப்படுத்தவும், பல்வேறு ஆலோசனைகள் வழங்கி விவசாயப் பணிகள் மேற்கொள்ளவும் அட்மா திட்டத்தின் கீழ் உழவர் நண்பர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். காடையாம்பட்டி வட்டாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 20 பேருக்கு ஆண்டுதோறும் ரூ.4 ஆயிரம் சேவை ஊதியமாக வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கான சேவை ஊதியம் வழங்கும் விழா காடையாம்பட்டி வேளாண் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

    ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பல்பாக்கி சி.கிருஷ்ணன், உழவர் நண்பர்கள் 20 பேருக்கு சேவை ஊதியத்தை வழங்கினார்.

    கோடை காலத்தில் செய்யப்படும் வேளாண் பணிகள், வயல் மேம்பாட்டுப் பணிகள் குறித்து வேளாண் அலுவலர்கள்

    பேசினர்.

    வேளாண் உதவி இயக்குநர் அ.நாசர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai