Enable Javscript for better performance
ஏரியிலிருந்து செம்மண் கடத்தியதாக 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ஓமலூர் அருகே ஏரியிலிருந்து செம்மண் கடத்தியதாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    காடையாம்பட்டி சந்தைப்பேட்டை ஏரியில் செம்மண் வெட்டி கடத்தப்படுவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.

    தீவட்டிப்பட்டி போலீஸாருடன் வியாழக்கிழமை சம்பவ இடத்திற்கு சென்று வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். டேனிஷ்பேட்டை கோட்டேரியில் செம்மண் வெட்டி எடுக்கப்பட்டது தெரியவந்தது.

    செம்மண் கடத்தியதாக காடையாம்பட்டியைச் சேர்ந்த பழனிசாமி (36), சுப்பிரமணி (38), கஞ்சநாயக்கன்பட்டி வெங்கடேசன் (30) ஆகிய 3 பேரையும் தீவட்டிப்பட்டி போலீஸார் கைது செய்தனர்.

    செம்மண் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 3 டிராக்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai