Enable Javscript for better performance
சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

    தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 15-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது.

    இதனால் பெரும்பாலானோர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை.

    கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் கே.தங்கவேலன் தலைமையில் செயலர் சுப்பிரமணியன், மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai