Enable Javscript for better performance
சென்ன கேசவப் பெருமாள் பெரிய தேர்இன்று வெள்ளோட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சென்ன கேசவப் பெருமாள் பெரிய தேர்இன்று வெள்ளோட்டம்

    By சங்ககிரி,  |   Published on : 17th April 2015 03:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் கோயில் பெரிய தேருக்கு ரூ.3.25 லட்சம் மதிப்பில் நடு அச்சுகள் மற்றும் இரும்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்டு வெள்ளிக்கிழமை வெள்ளோட்டம் விடப்படுகிறது.

    சங்ககிரி மலை மீது அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் சுவாமி தேர்த்திருவிழா ஒவ்வோர் ஆண்டும் சித்திரை பௌர்ணமி தினத்தன்று வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறும். மலையிலிருந்து நகருக்கு எழுந்தருளிய பின் 8 நாள்கள் பல்வேறு வாகனங்களில் சுவாமி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வரும் வைபவம் நடைபெறும்.

    9-ஆம் நாள் திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறும். ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி சிறிய தேர் முன்னாள் செல்ல பின்னால் அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடமனர் ஸ்ரீதேவி, பூதேவி அமர்ந்து செல்லும் பெரிய தேர் பக்தர்களால் வடம் பிடித்து இழுத்துச் செல்லப்படும்.

    கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்த் திருவிழாவின் போது தேருக்கு புதிய சக்கரங்கள் செய்ய வேண்டுமென பக்தர்கள் மற்றும் தேர்த் திருவிழா குழுவினர் அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.

    கோயில் செயல் அலுவலர் கோரிக்கை மனுவினை அறநிலையத்துறை உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். பெரிய தேருக்கு இரும்புச் சக்கரங்கள் செய்ய இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.3.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    திருச்சி பெல் நிறுவனத்தில் 1289 கிலோ எடையில் இரண்டு அச்சுகள், 1180 கிலோ எடையில் இரண்டு முன் சக்கரங்கள், 1045 கிலோ எடையில் இரண்டு பின்சக்கரங்கள் செய்யப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன.

    சித்திரை தேர்த்திருவிழா நடைபெற உள்ளதால் பெரிய தேருக்கு புதிதாகப் பொருத்தப்பட்ட இரும்புச் சக்கரங்கள் சரியாக உள்ளனவா என்று பரிசோதிக்க வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணிக்கு தேர் வெள்ளோட்டம் நடைபெற உள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai