Enable Javscript for better performance
தனியார் துறை பாதுகாப்பு சேவைப் பணிகளில் வேலைவாய்ப்புப் பெற இலவசப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    தனியார் துறை பாதுகாப்பு சேவைப் பணிகளில் வேலைவாய்ப்புப் பெற இலவசப் பயிற்சி

    By ,  |   Published on : 17th April 2015 03:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தனியார் துறை பாதுகாப்பு சேவைப் பணிகளில் வேலைவாய்ப்பைப் பெறும் வகையில் இலவச திறன் எய்தும் பயிற்சித் திட்டத்தில் சேர ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் அதிகரித்து வரும் அடுக்குமாடிக் கட்டடங்கள், வணிக வளாகங்கள், தனிக்குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள், வியாபார நிறுவனங்களில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு பயிற்சி பெற்றவர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். அந்தவகையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக இளைஞர்கள், தனியார் துறையில் வேலைவாய்ப்பைப் பெறும் வகையில் பாதுகாப்பு சேவைப் பணிகள் குறித்து 21 நாள் திறன் எய்தும் பயிற்சியை தமிழ்நாடு காவல் துறையுடன் இணைந்து வழங்க உள்ளது.

    இப்பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சி நேரம் தினசரி காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை. திருப்திகரமாக பயிற்சியை நிறைவு செய்யும் பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

    பயிற்சியாளர்களுக்கு தினமும் தேனீர் மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். இப்பயிற்சியில் சேர குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்துடன் இருத்தல் வேண்டும். வயது வரம்பு 18 முதல் 45-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களது அசல் கல்விச் சான்று, ஜாதி சான்று, இருப்பிட முகவரிக்கான சான்றாக குடும்ப அடையாள அட்டையின் அசல் மற்றும் சமீபத்தில் எடுக்கப்பட்ட 2 புகைப்படங்களைக் கொண்டு வரவேண்டும். இப்பயிற்சியில் சேர சான்றுகளின் 2 நகல்களுடன் பயிற்சி நிலையத்தில் அளிக்கப்படும் விண்ணப்பத்தினையும் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.

    இதற்கான விண்ணப்பங்கள் மே 20 மற்றும் 21 ஆகிய நாள்களில் காவல் துறை பயிற்சி நிலையங்களில் வழங்கப்படும். இத்தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு பிரிவு ஒன்றிற்கு 50 நபர்கள் வீதம் பயிற்சி அளிக்கப்படும். அப்பயிற்சியின் முடிவில் தனியார் துறை பாதுகாப்பு சேவை நிறுவனங்களில் பணிபுரிய ஏதுவாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெறும்.

    இதில் சேர விருப்பம் உள்ளவர்கள் சேலம் காவல்துறை கண்காணிப்பாளர் ஆயுதப்படை குமாரசாமிப்பட்டி காவல் பயிற்சி மைதானத்தை நேரில் அணுகலாம் என ஆட்சியர் க.மகரபூஷணம் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai