Enable Javscript for better performance
பிஎஸ்என்எல் தொலைபேசி இணையதள சேவைகள் பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    சேலத்தில் பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டதால், தொலைபேசி, இணையதள சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.

    பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தொலைதொடர்பு சேவை வியாழக்கிழமை காலை முதல் சேலம் தொலைதொடர்பு மாவட்டத்தில் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. இதனால் தொலைபேசி, செல்லிடப்பேசியைப் பயன்படுத்தும் பொதுமக்களும் அரசு அதிகாரிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இணையதள சேவையும் முற்றிலும் முடங்கியது.

    இதுகுறித்து புகார் தெரிவிக்க பிஎஸ்என்எல் அலுவலக எண்ணைக் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மேலும், இது தொடர்பாக வாடிக்கையாளர்கள், சேவை மையங்களுக்கு நேரில் சென்று நேரில் முறையிட்ட போது, தொழில்நுட்பப் பிரச்னை காரணமாக பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னை சரிசெய்யப்பட்டு விரைவில் சேவை வழங்கப்படும் என பிஎஸ்என்எல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அனைத்து அரசுத் துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் பிஎஸ்என்எல் சேவையைப் பயன்படுத்துவதால், எவரையும் தொடர்பு கொள்ள முடியாமல் அவதிக்குள்ளானார்கள். இரவு வரை இந்தப் பிரச்னை சரிசெய்யப்படவில்லை.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai