Enable Javscript for better performance
மர அறுவை ஆலைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு: வனத் துறையினர் 6 பேர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    மர அறுவை ஆலைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு: வனத் துறையினர் 6 பேர் மீது வழக்கு

    By சேலம்  |   Published on : 17th April 2015 03:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலத்தில் மர அறுவை ஆலைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்தது தொடர்பாக வனத் துறையினர் 6 பேர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப்

    பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

    சேலம் மாவட்டத்தில் சுமார் 230-க்கும் மேற்பட்ட மர அறுவை ஆலைகள் இயங்கி வருகின்றன. இதில் கடந்த 2013-இல் மட்டும் சுமார் 84-க்கும் மேற்பட்ட மர அறுவை ஆலைகளுக்கு வனத் துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்துள்ளதாகப் புகார் எழுந்தது. இந்தப் புகார் குறித்து லஞ்ச ஒழிப்புப் போலீஸார் விசாரித்தனர்.

    மர அறுவை ஆலைகளை முறைப்படுத்தும் வகையில் உரிய முறையில் ஆய்வு செய்து உரிமம் வழங்கும்படி கடந்த 2002-இல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    ஆனால், எந்தவித ஆய்வும் செய்யாமல் கடந்த 2013-இல் மாவட்ட வன அலுவலகம் மூலம் போலி ஆவணங்கள் தயார் செய்து, தில்லியில் உள்ள கமிட்டியில் அனுமதி பெற்று மர அறுவை ஆலைகளுக்கு உரிமம் வழங்கியது தெரியவந்தது. இதற்காக வனத் துறையினர் பெரும் தொகை பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக சேலம் சேர்வராயன் தெற்கு சரக முன்னாள் வனவர் சிவக்குமார், மாவட்ட வன அலுவலகக் கண்காணிப்பாளர் சுமதி, ஓட்டுநர் ரவி, நடேசன், தேன்மொழி, கலைவாணி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது வனத் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்டுத்தியுள்ளது.

    உரிய விசாரணை தேவை: இதுதொடர்பாக, சில்வர் கிரீன் விவசாய மர வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் இ.மோகன், செயலாளர் ஆர்.சிவராஜ் ஆகியோர் கூறியது:

    உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் கடந்த 2013-இல் 84-க்கும் மேற்பட்ட மர அறுவை ஆலைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது குறித்து வனத்துறை செயலர், தலைமைச் செயலர் ஆகியோருக்குப் புகார் செய்தோம். அப்போதைய மாவட்ட வன அலுவலராக இருந்த தங்கராஜ் உள்ளிட்டோரை இந்தப் பிரச்னையில் விசாரிக்க வேண்டும்.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த முறைகேடு குறித்து பல்வேறு நிலைகளில் புகார் செய்து வந்தோம். தற்போது வனத்துறையில் கீழ்நிலையில் உள்ளவர்கள் மீது மட்டும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்திட வேண்டும். மேலும், சேலத்தில் மர அறுவை ஆலைகளை முறைப்படுத்தி உரிமம் வழங்க வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.சேலம், ஏப்.16: சேலத்தில் மர அறுவை ஆலைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்தது தொடர்பாக வனத் துறையினர் 6 பேர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப்

    பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

    சேலம் மாவட்டத்தில் சுமார் 230-க்கும் மேற்பட்ட மர அறுவை ஆலைகள் இயங்கி வருகின்றன. இதில் கடந்த 2013-இல் மட்டும் சுமார் 84-க்கும் மேற்பட்ட மர அறுவை ஆலைகளுக்கு வனத் துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்துள்ளதாகப் புகார் எழுந்தது. இந்தப் புகார் குறித்து லஞ்ச ஒழிப்புப் போலீஸார் விசாரித்தனர்.

    மர அறுவை ஆலைகளை முறைப்படுத்தும் வகையில் உரிய முறையில் ஆய்வு செய்து உரிமம் வழங்கும்படி கடந்த 2002-இல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    ஆனால், எந்தவித ஆய்வும் செய்யாமல் கடந்த 2013-இல் மாவட்ட வன அலுவலகம் மூலம் போலி ஆவணங்கள் தயார் செய்து, தில்லியில் உள்ள கமிட்டியில் அனுமதி பெற்று மர அறுவை ஆலைகளுக்கு உரிமம் வழங்கியது தெரியவந்தது. இதற்காக வனத் துறையினர் பெரும் தொகை பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக சேலம் சேர்வராயன் தெற்கு சரக முன்னாள் வனவர் சிவக்குமார், மாவட்ட வன அலுவலகக் கண்காணிப்பாளர் சுமதி, ஓட்டுநர் ரவி, நடேசன், தேன்மொழி, கலைவாணி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது வனத் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்டுத்தியுள்ளது.

    உரிய விசாரணை தேவை: இதுதொடர்பாக, சில்வர் கிரீன் விவசாய மர வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் இ.மோகன், செயலாளர் ஆர்.சிவராஜ் ஆகியோர் கூறியது:

    உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் கடந்த 2013-இல் 84-க்கும் மேற்பட்ட மர அறுவை ஆலைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது குறித்து வனத்துறை செயலர், தலைமைச் செயலர் ஆகியோருக்குப் புகார் செய்தோம். அப்போதைய மாவட்ட வன அலுவலராக இருந்த தங்கராஜ் உள்ளிட்டோரை இந்தப் பிரச்னையில் விசாரிக்க வேண்டும்.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த முறைகேடு குறித்து பல்வேறு நிலைகளில் புகார் செய்து வந்தோம். தற்போது வனத்துறையில் கீழ்நிலையில் உள்ளவர்கள் மீது மட்டும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்திட வேண்டும். மேலும், சேலத்தில் மர அறுவை ஆலைகளை முறைப்படுத்தி உரிமம் வழங்க வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai