Enable Javscript for better performance
மேட்டூரில் மனிதச் சங்கிலி போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மேட்டூரில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது.

    மேட்டூர் பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை நடந்த போராட்டத்துக்கு சங்கத்தின் மேட்டூர் மின்திட்டத் தலைவர் எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தார். செயலர் கே.குருநாதன், பொருளர் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தனர். மேட்டூர் நகர விவசாயிகள் சங்க நிர்வாகி ஏ.அருணாசலம் போராட்டத்தை விளக்கிப் பேசினார்.

    மின்துறை பொதுத்துறையாகவே நீடிக்க வேண்டும். மின்கட்டண உயர்வைக் கைவிடவேண்டும். கூடுதல் விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்யும் தனியார் ஒப்பந்தங்களை ரத்து செய்வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai