Enable Javscript for better performance
ரேஷன் கடையை மூடி பொதுமக்கள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சேலத்தில் ரேஷன் கடையை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து பொதுமக்கள் கடையை மூடிப் போராட்டம் நடத்தினர்.

    சேலம் தேவேந்திரபுரத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் ரேஷன் கடை இயங்கி வந்தது. இக்கடையின் ஒரே அறைக்குள் இரு விற்பனையாளர்கள் முகமது புறா தெரு, அருணாசல ஆசாரித் தெரு பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு பொருள்களை விநியோகித்து வந்தனர். இந்தக் கடையில் 2,000-க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர்.

    கூட்டுறவுத் துறை நிர்வாகம் முகமது புறா பகுதி மக்களுக்காக லட்சுமி நகர் பகுதியில் ரேஷன் கடையை கடந்த சில நாள்களுக்கு முன் மாற்றியது.

    ரேஷன் கடையை மாற்றியதைக் கண்டித்து, லட்சுமி நகரில் இயங்கி வந்த புதிய ரேஷன் கடையை மூடி முற்றுகையிட்டு முகமது புறா பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.

    இதுகுறித்து போராட்டம் நடத்திய அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியது:

    சேலம் மாநகரத்தின் 33-ஆவது வார்டுக்குள்பட்ட பகுதியில் தேவேந்திரபுரம் ரேஷன் கடையில் ரேஷன் பொருள்களை வாங்கி வந்தோம். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ரேஷன் கடையை 3 கி.மீ. தொலைவில் உள்ள லட்சுமி நகருக்கு மாற்றியுள்ளனர். இதனால் நீண்டதூரம் நடந்து வந்து இந்தப் பகுதியில் பொருள்கள் வாங்க சிரமமாக உள்ளது. எனவே, எங்களுக்கு பழைய இடத்திலேயே கடையை மாற்றித் தர வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என்றனர்.

    இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ரேஷன் கடை இடமாற்றப் பிரச்னை குறித்து உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாற்காலிகமாக போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai