Enable Javscript for better performance
ஸ்டாலின் பிறந்தநாள்: 2,660 பேர் ரத்த தானம்- Dinamani

சுடச்சுட

    

    திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சேலம் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நெய்க்காரப்பட்டியில் வியாழக்கிழமை நடந்த முகாமில் 2,663 பேர் ரத்ததானம் வழங்கினர்.

    சேலம் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் இளைஞர் எழுச்சி நாளாக ஒரு மாதம் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் ஏழை எளிய மக்கள், பள்ளி மாணவ, மாணவியருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

    இதன் ஒரு பகுதியாக பனமரத்துப்பட்டி ஒன்றியம் சார்பில் நெய்க்காரப்பட்டியில் ரத்ததான முகாம் வியாழக்கிழமை நடந்தது. இதில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா தலைமையில் நடந்த முகாமில் 2,663 பேர் ரத்ததானம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. நடிகர் வாசு விக்ரம், பனமரத்துப்பட்டி ஒன்றியச் செயலர் சுரேஷ்குமார், ஆட்டையாம்பட்டி பேரூராட்சித் தலைவர் முருகபிரகாஷ், முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி, சேலம் மாநகர மாணவரணி அமைப்பாளர் ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாலையில் நடந்த நிகழ்ச்சியில் 6,363 ஏழை எளியோருக்கு தையல் இயந்திரங்கள், மூன்று சக்கர சைக்கிள், மின்சார அடுப்பு, இலவச வேட்டி, சேலை, மாணவ, மாணவியருக்கு நோட்டுப் புத்தகங்கள் ஆகியவற்றை வீரபாண்டி ராஜா வழங்கினார்.

    பொதுக் கூட்டத்தில் மாநில கொள்கை பரப்புச் செயலர் புகழேந்தி, சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மாநில தேர்தல் பணிக்குழுச் செயலர்டி.எம்.செல்வகணபதி, மாநில கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைத் தலைவர் வாசு விக்ரம் ஆகியோர் பேசினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai