Enable Javscript for better performance
ஏற்காட்டில் கால்பந்துப் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    சேலம் மாவட்டம், ஏற்காட்டில் தொன்போஸ்கோ 200-ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ரெட்ரீட் இல்லம் சார்பில் 3-ஆம் ஆண்டு கால்பந்துப் போட்டி ஜன. 25-ஆம் தேதி முதல் இரண்டு நாள்கள் நடைபெற்றன.

    இந்த நிகழ்ச்சிக்கு அருள்தந்தை அமல்ராஜ் சூசை தலைமை வகித்தார். ஏற்காடு மலைக் கிராமங்களிலிருந்து 22 அணிகள் போட்டியில் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் லாங்கில் நகரைச் சேர்ந்த இளையதீபம் அணி முதல் பரிசு ரூ.5 ஆயிரம், சுழற்கோப்பையை வென்றது. 2-ஆவது பரிசு ரூ.4 ஆயிரம், கோப்பையை ரெட்ரீட் இல்ல சகோதரர்கள் பெற்றனர். 3-ஆவது பரிசு ரூ.3 ஆயிரத்தை மஞ்சக்குட்டை அணி பெற்றது.

    போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அருள் தந்தைகள் அமல்ராஜ் சூசை, சைமன், டோமினிக் மேத்தியூ ஆகியோர் பரிசுகளை வழங்கினர். விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளை அருள்தந்தைகள் ஜெயசீலன், தாமஸ் ஆகியோர் செய்திருந்தனர். போட்டியின் நடுவர்களாக சசிகுமார், ஜமால்அகமத், கிருஷ்ணமூர்த்தி, ஜெகதீஷ்குமார், மனோஜ்குமார், அரவிந்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai