Enable Javscript for better performance
பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    சேலம் மாவட்டம், ஓமலூரில் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள்

    வலியுறுத்தினர்.

    ஓமலூரில் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி திங்கள்கிழமை 2-ஆவது நாளாக நடைபெற்றது.

    தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகள் போலீஸார் துணையுடன் அகற்றப்பட்டன. இந்த நிலையில் பாரபட்சமின்றி அனைத்து இடங்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டது.

    ஓமலூர் பகுதியில் அண்மையில் சாலை விரிவாக்கம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தார்ச் சாலை அமைக்கப்பட்டது. தற்போது சிறிய அளவிலான கடைகள் மட்டும் உடனே அகற்றப்படுகின்றன. பெரிய வணிக நிறுவனங்கள் ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ள அவகாசம் அளிக்கப்படுகிறது. இதனைத் தவிர்த்து, அனைத்து இடங்களிலும் முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai