Enable Javscript for better performance
மேட்டூர் வனப் பகுதியில் 150 கிலோ காட்டெருமை இறைச்சி மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    மேட்டூர் வனப் பகுதியில் 150 கிலோ காட்டெருமை இறைச்சி மீட்பு

    By மேட்டூர்,  |   Published on : 27th January 2015 04:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலம் மாவட்டம், மேட்டூர் வனப் பகுதியில் கடத்தல் காரர்கள் விட்டுச் சென்ற 150 கிலோ காட்டெருமை இறைச்சி, மோட்டார் சைக்கிளைக் கைப்பற்றி வனத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    மேட்டூர் வனச்சரகத்தைச் சேர்ந்த வன ஊழியர்கள் நீதிபுரம், தண்டா வனப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து சென்றனர். அப்போது, புலியூர் பிரிவு சாலை அருகே மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வனத் துறையினரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு தப்பி ஓடினர். இதனால், சந்தேகம் அடைந்த வனத் துறையினர், மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டைகளை சோதனையிட்டனர். அதில் காட்டெருமையின் இறைச்சி சுமார் 150 கிலோ இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இறைச்சியையும், கடத்தல்காரர்கள் விட்டுச்சென்ற மோட்டார் சைக்கிளையும் வனச்சரகர் சண்முகம் கைப்பற்றினார்.

    இந்தச் சம்பவம் குறித்து வனத்துறையின் வழக்குப் பதிந்து, காட்டெருமை இறச்சியைக் கடத்தி வந்த இருவரையும் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai