Enable Javscript for better performance
ஆள்கடத்தல் வழக்கில் இருவருக்கு  ஆயுள் சிறைத் தண்டனை:  சேலம் நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    ஆள்கடத்தல் வழக்கில் இருவருக்கு  ஆயுள் சிறைத் தண்டனை:  சேலம் நீதிமன்றம் உத்தரவு

    By  சேலம்,  |   Published on : 28th January 2015 02:08 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆள் கடத்தல் வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சேலம் மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
     சேலம் கோரிமேடு ஆத்துக்காடு பகுதியைச் சேர்ந்த தமிழரசன் (31), மேட்டூர் பொன்நகர் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (43), மேட்டூர் தொட்டில்பட்டி பகுதியைச் சேர்ந்த கண்ணன் (24) ஆகிய மூவரும் பெரம்பலூர் மாவட்டம், நற்குணம் பகுதியைச் சேர்ந்தவர் கொளஞ்சியப்பனை (55) தொடர்பு கொண்டு தங்களிடம் உள்ள கலசத்தில் இரிடியம் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும் என்று அழைத்தனர்.
     இதையடுத்து, கொளஞ்சியப்பன் தனது மகன் எலக்ட்ரீஷியன் முத்தமிழ்செல்வனை சேலத்துக்கு அனுப்பிவைத்தார். கடந்த 2010-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி முத்தமிழ்செல்வன் சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்தார். அவரை தமிழரசன், ராமச்சந்திரன், கண்ணன் உள்ளிட்ட மூவரும் சேலம் கோரிமேடு ஆத்துக்காடு பகுதிக்கு கடத்திச் சென்றனர். இதையடுத்து, அவரை துன்புறுத்தல் செய்து, அவரின் தந்தையை தொடர்புக் கொண்டு ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டினர். கொளஞ்சியப்பன் கடத்தல்காரர்களுக்கு ரூ.20 ஆயிரம் கொடுத்து தனது மகனை மீட்டுச் சென்றார்.
     இதுகுறித்து சேலம் பள்ளப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தமிழரசன், ராமச்சந்திரன், கண்ணன் ஆகியோரைக் கைது செய்தனர். இதில் கடந்த 2011-ஆம் ஆண்டு நிகழ்ந்த விபத்தில் கண்ணன் உயிரிழந்தார்.
     இந்த வழக்கு சேலம் மாவட்ட 2-ஆவது அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி என்.நசீமா பானு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞர் எம்.பாலசுப்பிரமணியம் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி நசீமா பானு, எலக்ட்ரீஷியனைக் கடத்திச் சென்று துன்புறுத்தல் செய்த வழக்கில் தமிழரசன், ராமச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai