Enable Javscript for better performance
ஏற்காட்டில்  கழிவு நீர்க் குட்டையாக மாறிவரும் அலங்கார ஏரி- Dinamani

சுடச்சுட

    

    ஏற்காட்டில்  கழிவு நீர்க் குட்டையாக மாறிவரும் அலங்கார ஏரி

    By  ஏற்காடு,  |   Published on : 28th January 2015 02:08 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலம் மாவட்டம், ஏற்காடு காந்திபூங்கா அருகே சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் உள்ள அலங்கார ஏரி பராமரிப்பின்றி கழிவுநீர்க் குட்டையாக மாறி வருகிறது.
     ஏற்காட்டின் மையப் பகுதியில் உள்ள இந்த ஏரியில் மழை பெய்து நீர் தேங்கி நிற்பதால் லாங்கில் பேட்டை, ஐந்துசாலை, பேர்லான்ஸ் குடியிருப்புப் பகுதியில் உள்ள கிணறுகளுக்கு நீர் ஆதாரமாக உள்ளது.
     தற்போது, இந்த ஏரி பகுதியில் இரவு நேரங்களில் அமர்ந்து பலர் மது அருந்துகின்றனர். இதனால், ஏற்படும் கழிவுகளை ஏரியில் கொட்டுவிட்டு சென்று விடுகின்றனர். மேலும், ஏரியில் அதிக அளவு ஆகாயத்தாமரை வளரத் தொடங்கியுள்ளதால் ஏரி கழிவுநீர்க் குட்டையாக மாறிவருகிறது.
     ஏற்காடு பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் இந்த ஏரியில் கழிவுகள் கலப்பதைத் தடுத்து, நீர் ஆதாரத்தை பாதுகாத்து, பராமரிக்க வேண்டும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தினர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai