Enable Javscript for better performance
ஓமலூர் அருகே குடிநீர் வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    ஓமலூர் அருகே குடிநீர் வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

    By  ஓமலூர்,  |   Published on : 28th January 2015 02:08 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே குடிநீர், பொது சுகாதாரத்தை மேம்படுத்த வலியுறுத்தியும் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சிக்கம்பட்டி கிராமம் பெரியகாடம்பட்டி பகுதியில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பகுதியில் முறையாக காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
     இந்தப் பகுதியில் குடிநீர்க் குழாயின் இடையே கேட்வால்வு அமைத்து, ஊராட்சித் தலைவரின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு தினசரி குடிநீர் விநியோகம் செய்யபடுவதாகவும், அதனால், தங்கள் பகுதிக்கு தண்ணீர் கிடைப்பதில்லை என்றும் கூறி 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை திடீர் சாலை
     மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியது:
     ஊராட்சித் தலைவர் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் தினசரி தண்ணீர் விநியோகம் செய்கிறார். இதுகுறித்து ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் மனு அளித்த பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும், டெங்கு காய்ச்சல், தொற்றுநோய்கள் தாக்குதல் ஏற்பட்டு பொதுசுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
     இந்தச் சாலை மறியல் போராட்டம் காரணமாக ஓமலூர் - சங்ககிரி பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த தாரமங்கலம் போலீஸார் பொதுமக்களை சமாதானப்படுத்தினர். குடிநீர்க் குழாய்களை ஆய்வு செய்து உடனடியாக குடிநீர் விநியோகம் சீரமைக்கப்படும் என்று அதிகாரிகள் அளித்த உறுதியை ஏற்று போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai