Enable Javscript for better performance
மேட்டூர் அருகே டெங்கு காய்ச்சலால் சிறுவன் சாவு:  பொதுமக்கள் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    மேட்டூர் அருகே டெங்கு காய்ச்சலால் சிறுவன் சாவு:  பொதுமக்கள் சாலை மறியல்

    By  மேட்டூர்,  |   Published on : 28th January 2015 02:15 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்தார்.
     மேச்சேரி அருகேயுள்ள மல்லிகுந்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு. இவரது மகன் மணிகண்டன் (6). டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு மேட்டூர் அரசு மருத்துவமனை, சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மணிகண்டன் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
     இந்த நிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூணான்டியூர் - மேச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மல்லிகுந்தம் பகுதியில் சுகாதாரச் சீர்கேடு காரணமாகவே டெங்கு காய்ச்சல் பரவியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுவன் மணிகண்டனின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும், ஊராட்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     இதுகுறித்து தகவலறிந்த மேச்சேரி ஊராட்சி ஒன்றிய ஆணையர், அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதியில் உடனடியாக சுகாதாரப் பணிகளை மேற்கொண்டனர். இதையடுத்து, கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இந்தச் சம்பவம் குறித்து மேச்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
     மல்லிகுந்தம் பகுதியில் மேலும் 18 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai