Enable Javscript for better performance
மேட்டூர் நீதிமன்றத்தில்  குஷ்பு வழக்கு ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    மேட்டூர் நீதிமன்றத்தில்  குஷ்பு வழக்கு ஒத்திவைப்பு

    By  மேட்டூர்,  |   Published on : 28th January 2015 02:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நடிகை குஷ்பு பயணம் செய்த கார் மீது முட்டை வீசிய வழக்கு மேட்டூர் நீதிமன்றத்தில் மார்ச் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
     தமிழ்பெண்களின் கற்புக் குறித்து நடிகை குஷ்பு கூறிய கருத்துக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. மேட்டூரைச் சேர்ந்த பா.ம.க. வழக்குரைஞர் பிரிவு நிர்வாகி அ.முருகன் குஷ்பு மீது மேட்டூர் 2-ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
     இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு குஷ்பு காரில் திரும்பிச் செல்லும்போது, அவரின் கார் மீது முட்டை, தக்காளி வீசப்பட்டன. இதுதொடர்பாக பா.ம.க. மாவட்டச் செயலர் அறிவழகன் உள்பட 41 பேர் மீது மேட்டூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை மேட்டூர் 1-ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் பாக்யராஜ் வழக்கு விசாரணையை மார்ச் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai