Enable Javscript for better performance
பள்ளி ஆசிரியை பாலியல் புகார்:தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பள்ளி ஆசிரியை பாலியல் புகார்:தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

    By ஏற்காடு,  |   Published on : 16th October 2015 04:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பள்ளி ஆசிரியை கொடுத்த புகாரையடுத்து, தலைமை ஆசிரியர் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    சேலம் மாவட்டம், ஏற்காடு ஊராட்சி ஒன்றியம், நல்லூர் கிராமத்தில் தலைமை ஆசிரியராக சத்தியராஜ் பணியாற்றி வந்தார். இவர், உடன் பணிபுரியும் ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக, கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி ஏற்காடு தொடக்கக் கல்வி அலுவலரிடம் புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, தொடக்கக் கல்வி அலுவலர் விசாரணை செய்து அறிக்கையை தொடக்கக் கல்வி இயக்குநருக்கு அளித்தார்.

    இதனைத் தொடர்ந்து, சேலம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தங்கராஜ் புதன்கிழமை நேரில் சென்று விசாரணை நடத்தி, தலைமை ஆசிரியர் சத்தியராஜுக்கு பணியிடை நீக்க உத்தரவை வழங்கினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai