Enable Javscript for better performance
பண இரட்டிப்பு மோசடி: கரூரைச் சேர்ந்தவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    சேலத்தில் பண இரட்டிப்பு செய்து தருவதாக மோசடியில் ஈடுபட முயன்ற கரூரைச் சேர்ந்தவரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.

    சேலம் சீலநாய்க்கன்பட்டி இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (40). பானிப் பூரி கடை வைத்துள்ளார். இவரிடம் கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் அருகே உள்ள காதப்பாறைப் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (38) என்பவர் பணத்தை  இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறினாராம்.  இதை நம்பிய மகேந்திரன், பாஸ்கரைத் தொடர்பு கொண்டதில், அவர் சீலநாயக்கன்பட்டி வந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு சென்ற மகேந்திரனிடம், பாஸ்கர் பணம் பறிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

    பாஸ்கரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த மகேந்திரன் தற்போது பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பாஸ்கர், மகேந்திரன் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதுகுறித்து மகேந்திரன் அன்னதானப்பட்டி போலீஸாருக்கு தகவல் அளித்தார்.இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்று பாஸ்கரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் பல இடங்களில் அவர் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிந்து  வெள்ளிக்கிழமை இரவு பாஸ்கரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai