Enable Javscript for better performance
அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை- Dinamani

சுடச்சுட

    

    அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை

    By சேலம்  |   Published on : 15th April 2016 06:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அம்பேத்கரின் 125-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சேலத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலையிட்டு மரியாதை செலுத்தினர்.

     சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்கா அலுவலகம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு அதிமுக சார்பில் அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் எம்.பி. வி.பன்னீர்செல்வம், மேயர் எஸ்.சௌண்டப்பன், மாவட்டச் செயலர் எம்.கே.செல்வராஜு, வேட்பாளர்கள் ஜி.வெங்கடாஜலம் (சேலம் மேற்கு), கே.ஆர்.எஸ்.சரவணன் (சேலம் வடக்கு), ஏ.பி.சக்திவேல் (சேலம் தெற்கு), நகர கூட்டுறவு வங்கி தலைவர் துரைராஜ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

     திமுக சார்பில் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் குட்டி தமிழரசன், மாநகர அமைப்பாளர் தேவதாஸ் உள்ளிட்டோரும், காங்கிரஸ் சார்பில் மாநகர மாவட்டத் தலைவர் மேகநாதன், மேற்கு மாவட்டத் தலைவர் முருகன் உள்ளிட்டோரும், தேமுதிக சார்பில் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் எம்.எல்.ஏ, மாவட்டச் செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும், பாஜக சார்பில் வேட்பாளர்கள் அண்ணாதுரை, கோபிநாத், முருகேசன் ஆகியோரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் ஜெயச்சந்திரன், அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநில இளைஞரணி செயலர் ஜங்ஷன் அண்ணாதுரை, தந்தை பெரியார் திராவிடர் கழகம், அருந்ததியர் மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai